நவம்பர் 24 அன்று: சுலபமான வெளியேற்றுதலுக்கும் மேலும் அதிகமான வாடகைகளுக்கும் 2x Nein
சுவிஸ் நாட்டில் நாளுக்கு நாள் வாடகைகள் உயர்ந்து கொண்டே போகின்றன. 2009 முதல் அவை 24% உயர்ந்துள்ளன! இப்பொழுது வாடகை அளவுகள் மேலும் உயர்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 24 அன்று நாம் இரண்டு மசோதா வரைவுகளுக்கு வாக்களிக்க உள்ளோம். சுய தேவைக்காக வாடகையாளர்களை வீட்டைக் காலி செய்ய சொல்வதற்கான விதிகளில் தளர்க்கப்பட்டு, உள்வாடகைக்கு விடுவதற்கான விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் வாடகையாளர்களின் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்துவனவாகும். இவற்றின் நோக்கம்: வாடிக்கையாளர்களை எளிதில் வீட்டை விட்டு வெளியேற்றி, பின்னர் வாடகைகளை மேலும் அதிகப்படுத்துவது. இந்த சட்ட மாற்றத்தின் வாயிலாக
- ஏற்கனவே ஒவ்வொரு குடும்பமும் மாதமொன்றிற்கு தலா 360.- CHF அதிக வாடகை அளித்து வரும் நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் வாடகையாளர்களின் வாயிலாக மேலும் லாபம் ஈட்ட இயலும்.
- வாடகையாளர்கள் மேலும் எளிதாக அவர்களின் வாடகை வீட்டை இழக்க நேரிடும்.
- சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் 30 நாட்களில் வீட்டைக் காலி செய்ய நேரிடும்.
- வீடு விற்பனை மற்றும் வாடகை நிறுவனங்கள் மேலும் அதிக லாபத்தை ஈட்ட இயலும்.
இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்! எனவே நவம்பர் 24 அன்று 2x NEIN!
உங்கள் அயலவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
இந்த முக்கியமான வாக்கெடுப்பில் இயன்றவரை அதிகமான மக்கள் வாக்களிக்கச் செல்வதை உறுதிசெய்ய, அயலவர்கள் சார்ந்த இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்து, இதை உங்கள் அயலவர்களின் தபால் பெட்டியில் போடவும் அல்லது அடுக்கு மாடியில் உள்ள படிக்கட்டில், லிவ்டில் அல்லது சலவை அறை போன்ற பொதுவான பகுதிகளில் வைக்கவும்.
ஒரு சிறிய சைகை கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
இது மிகவும் எளிதானது:
1. கடிதத்தை பதிவிறக்கவும்.
2. நீங்கள் விரும்பினால் தனிப்பட்ட செய்தியைச் சேர்க்கவும்.
3. உங்கள் சுற்றுப்புறத்தில் கடிதத்தை பகிரவும் அல்லது ஒரு தெளிவான இடத்தில் அதை வைக்கவும்.
மறக்க வேண்டாம்: இந்த இணைப்பை அல்லது கடிதத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரடியாகப் பகிரவும். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் வாக்களிக்கச் செல்ல ஊக்குவிக்க முடியும்.
அயலவர்கள் சார்ந்த இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்து
உங்களால் வாக்களிக்க இயலுமா? → எனில் வாக்களியுங்கள்!
உங்களால் வாக்களிக்க இயலாது → எனில் பிறருக்கு தெரிவியுங்கள், தகவலைப் பகிருங்கள்!
வழிமுறை: இதுவே வாக்களிப்பதற்கான சரியான முறை:
- வாக்களிப்பதற்கான உறையை மிகவும் ஜாக்கிரதையாக பிரியுங்கள். உறையைத் தூக்கி எறிய வேண்டாம். உங்களுடைய ஆவணங்களைத் திருப்பி அனுப்புவதற்கு அது தேவைப்படும்.
- உங்களுடைய வாக்களிக்கும் உறைக்குள் கீழ்கண்டவற்றை நீங்கள் காணலாம்:
- வாக்குச்சீட்டு (canton-இற்கு ஏற்ப தோற்றம் மாறுபடலாம்)
- வாக்குச்சீட்டை ஒப்படைப்பதற்காக ஒரு சிறிய உறை (எல்லா canton-களிலும் கிடையாது)
- வாக்களிப்பு குறித்து அரசிடமிருந்து தகவல்கள் (சிறிய சிவப்பு புத்தகம்)
- உங்களுடைய தகவல்கள் அடங்கிய வாக்காளர் அடையாள அட்டை.
- தேசிய அளவில் வாக்களிப்பதற்கான வாக்கு சீட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு இடங்களில் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும்:
- Änderung des Obligationenrechts (Mietrecht: Untermiete)
- Änderung des Obligationenrechts (Mietrecht: Kündigung wegen Eigenbedarfs)
இரண்டு இடங்களிலுமே நீங்கள் கண்டிப்பாக NEIN என்று வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் வசிக்கும் canton-இற்கு ஏற்ப பிராந்திய அளவிலான வாக்கெடுப்புகளும் இருக்கும். அந்த வாக்குச்சீட்டினையும் நீங்கள் மேற்கண்டவாறு பூர்த்தி செய்யுங்கள்.
- பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் வாக்குச்சீட்டினை சிறிய உறைக்குள் போட்டு, அதனை ஒட்டுங்கள். உங்களுடைய canton-இல் சிறிய உறை கொடுக்கப்படவில்லை எனில், பூர்த்திசெய்யப்பட்ட உங்கள் வாக்குச்சீட்டினை பெரிய உறைக்குள் போடுங்கள்.
- வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் கையொப்பத்தினை இட்டு, அதையும், சிறிய உறையையும் பெரிய உறைக்குள் போடுங்கள்.
- வாக்குச்சீட்டுகளை உறைக்குள் இடும்போது உங்கள் Gemeinde-வின் முகவரி வெளியில் தெரிகிறதா என்று பரிசோதிக்கவும். பின்னர் நீங்கள் உறையை ஒட்டலாம்.
- வாக்குச்சீட்டுகள் அடங்கிய உறையை உங்கள் Gemeinde-விற்கு அனுப்புங்கள். நவம்பர் 19, 2024 வரை நீங்கள் இந்த உறையை எந்த அஞ்சல் பெட்டியில் வேண்டுமானாலும் போடலாம். தாமதம் ஏற்பட்டால், சரியான நேரத்திற்கு சென்றடையுமாறு உறையினை உங்கள் Gemeinde-விற்கு நேரடியாக கொண்டு சென்று ஒப்படையுங்கள்.